{font-family:Latha, TheneeUniTx;font-size:13px;}

Monday, October 16, 2006

நானும் சாய்பாபாவும்-1

மங்கை அவர்களை நீளநீளமாய் பதிவெழுதுகிறார் என கேலிசெய்ததன் விளைவோ என்னவோ இப்படி பகுதிபகுதியாய் பதிவெழுதி அவஸ்தைப் படு(த்து)கிறேன்....ம்ம்ம்ம்.திரு.முத்து தமிழினி அவர்களின் முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் காட்டமாய் நானிட்டிருந்த பின்னூட்டத்தின் போதே எழுதியிருக்க வேண்டிய பதிவு...சமீபத்தில் பொன்ஸ் நினைவுபடுத்தியதால் வலையுலகிற்கு இப்படியான பதிவினைப் படிக்கும் சோதனை...

சாய்பாபாவிடம் போவதற்கு முன் என்னோட ஆன்மீக வரலாற்றினை கொஞ்சம் ஃப்ளாஷ் பேக்குகிறேன்....என்னுடைய பாட்டன் முப்பாட்டனெல்லாம் சாமியை வீதியில் நின்று உற்சவரைத்தான் பார்த்து/கும்பிட்டுக்கொண்டிருந்தனர்.அவர்கள் வாங்கி வந்த வரமும் சூழலும் அப்படி....எனக்கோ என் தந்தையின் பதவியின் காரணமாய் மூலவருக்கே மூச்சுமுட்டும் பக்கத்தில் நின்று முதல்மரியாதை மற்றும் பரிவட்டத்தோடு சாமி கும்பிடற கொடுப்பினை....இதற்குகெல்லாம் காரணமான சமுதாய பெரியவர்களை இக்கணத்தில் நன்றியோடு நினைக்காவிட்டால் என் கட்டை வேகாது....ம்ம்ம்ம்ம்

அநேகமாய் தமிழகமெங்கும் என் தந்தை பணியில் இருந்த எல்லா ஊர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்து கோவில்கள் என் பாதம் பட்ட புண்ணியமுடைத்தவை....ஆரம்பத்தில் ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் அனுபவித்த கோவில் உலாக்கள்...வளர வளர சலிப்பினையே உண்டாக்கியது.சலிப்புகள் எரிச்சலாய் மாறத்துவங்கிய காலகட்டத்தில் எல்லாவகையான புத்தகங்களும் எனக்கு படிக்கக் கிடைத்தது...இதில் பெரியாரும் நாத்திகமும் பூர்வசென்ம பந்தமென ஒட்டிக்கொண்டனர்....

இந்தத் தீயில் எண்ணை ஊற்றுவது போல நம்மளுடைய பல பிரார்த்தனைகளை எல்லாக் கடவுளர்களும் ஈவிரக்கமின்றி நிராகரித்து நாத்திகனாகத் மாற தூண்டினார்கள் என்பதே உண்மை.(ஹி..ஹி..பல சந்ந்தர்பங்களில் பரிட்சைகள்ல கம்மியா மார்க் போட்டு கால வாரி...அதுனால அப்பா முதுகுல ரோடு போட்ட சம்பவங்கள் உண்டு.).

கல்லூரியில் காலடிவைத்த போது முழு நாத்திகன்...அந்த காலகட்டத்தில் என்னுடைய இன்மொழிகளுக்கு எந்தத் தெய்வமும் தப்பவில்லை....ஹி..ஹி...இதில் ரொம்பவும் பாதிக்கப்பட்டவர் திருவாளர் பிள்ளையார்தான்....எங்கள் கல்லூரியின் பின்னால் மயில்காடு என்று நிஜமாகவே ஒரு காடு இருந்தது...(ம்ம்ம்..இப்ப அங்க கட்டிடம் கட்டி காட்டையே அழித்துவிட்டது நிர்வாகம்). அங்கே ஒரு காட்டுப்பிள்ளையார் ஒருவர்...மூணடி உயரத்துல மூக்கும் முழியுமாய் லட்சணமாய்......

கவுண்டர்கிட்ட மாட்டின செந்தில் மாதிரி...அவரத்தான் ரொம்ப இம்சை பண்ணீருக்கேன், அவர் ரொம்ப சமத்து ஒன்னுமே சொன்னதில்லை...ம்ம்ம்...ஆனா நாங்க பாசக்காரபயலுக ...எந்தப் பிரச்சினைன்னாலும் அவர்கிட்டத்தான் போய் படுத்திருப்போம். நமக்கு இந்த தண்ணி தம்மெல்லாம் பழக்கமில்லையா அதுனால அவர் அந்த சோதனைல இருந்து தப்பிச்சார்....(ஹி..ஹி..அவர் பண்ணின புண்ணியம அவரக் காப்பத்தனும்ல...).

இப்படியான ஒரு சந்தோஷ தினத்தில்.....
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.

7 Comments:

Blogger வினையூக்கி said...

///எங்கள் கல்லூரியின் பின்னால் மயில்காடு என்று நிஜமாகவே ஒரு காடு இருந்தது...(ம்ம்ம்..இப்ப அங்க கட்டிடம் கட்டி காட்டையே அழித்துவிட்டது நிர்வாகம்). ///
Yes Senior, They had built Canteen there.
:( :(

2:11 AM  
Blogger செந்தழல் ரவி said...

எந்த கல்லூரி நீங்க ?

2:31 AM  
Blogger சதயம் said...

வாங்க வினையூக்கி...

அன்மையில் போயிருந்தேன்...காடிருந்த சுவடே இல்லை...பிள்ளையார் மட்டும் அப்படியே இருந்தார்..."வாடா மாப்ளே"...னு கூப்டறாரோன்னு கூடத்தோணிச்சு....ம்ம்ம்ம், அவருடைய ஒரு கை சேதமாகியிருந்தது ரொம்ப வருத்தமாப் போச்சு....கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அவர்கூட தனியா உக்காந்திருந்தேன்....அடிக்கடி வந்து அவரை பார்த்துட்டுப் போகனும்னு தோணிச்சு....ம்ம்ம்ம்ம்

6:22 AM  
Blogger சதயம் said...

வாங்க ரவி...

நம்ம காலேஜ் மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரி...திருப்பரங்குன்ற மலையடிவாரத்தில் நிஜமாவே ரொம்ப அழகிய பெரிய கல்லூரி....

நம்ம கப்பி பய....வினையூக்கி...அப்புறம் கால்கரிசிவா...யாத்ரீகன்...நான்...எல்லாம் அங்க இருந்துதான் கெளம்பி வந்தவய்ங்க....

6:25 AM  
Blogger வினையூக்கி said...

சீனியர் சார், கால்கரி சிவா எந்த இயர் பாஸ் அவுட்

1:00 PM  
Blogger குமரன் (Kumaran) said...

பாத்தீங்களா? ஆன்மிகத்தைப் பத்தி பேசத்தொடங்கி கல்லூரியப் பத்தி மட்டுமே பேசறீங்க. இது தான் உங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம். சதயம் உங்களைச் சொல்லலலை. பின்னூட்டிய மக்களைச் சொன்னேன். :-)

(என் மனச்சாட்சி: நீ மட்டும் என்ன வாழுது? பதிவைப் பத்தி நீ எதாவது சொல்லியிருக்கியா?)

ஹிஹி

4:28 AM  
Blogger செந்தழல் ரவி said...

This comment has been removed by a blog administrator.

7:12 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home